எனக்கு மட்டுமென்ன ஆசை இல்லாமலா உன்னை என்னோடு பொக்கிசமாய் வைத்திருக்க !!!!!!!
மளிகை கடைகாரனுக்கு எங்கடி தெரிய போகுது !!
நான் ஒன்னாவது படிக்கைலே ஏதோ ஒன்னாவது
வாங்கணுமுன்னா நீதானடி என் கையிலிருப்ப !!
அடுத்த நாள் ஆசைக்கு முன்னாடி நாள் அழுதும்
முன்னத்த நாள் நிராகாசைக்கு இன்னத்த நாள் அழுதும் அம்மாகிட்ட உன்ன வாங்கறதுக்கு அடியையும் வாங்கி விளையாட
போவேனடி!! அன்னைக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்க
உனக்காக தானடி அம்மாகிட்டயும் அடி வாங்கினேன் ??
இன்னைக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தேடிதாண்டி
வாங்க வேண்டிருக்கு!!!
உன்ன தேடி கண்டுபுடிச்சி எடுத்த என் சிட்டு குருவி பையன்கிட்ட
மளிகை கடைக்காரன் சொன்னானாம் ???? இந்த காசு செல்லா காசுன்னு !!!
அவனுக்கு எங்கடி தெரிய போகுது நீ என் செல்லகாசுன்னு !!!!
என்றும் உன் நினைவுடன்...
நிர்மல் ...........
wonderful da........
ReplyDeleteun chella kasu kidaikka valthukal.